
பால்வெளியில் இறகாக

மிதக்கிறது புவிப்பந்து
தன்னுள்
விண்ணையும் மண்ணையும்
கடலையும் காற்றையும்
நெருப்பையும் சுமந்து கொண்டு!
மண்ணைத் தழுவிய மரங்கள்
மரங்களை அணைத்தப் பூக்கள்
நிமிர்ந்து நிற்கும் மலைகள்
நிறைத்துக் கிடக்கும் கடல்கள்
ஊறும் புழுக்கள்
உலவும் பூச்சிகள்
பறக்கும் பறவைகள்
தாவும் விலங்குகள்
இவை போலவே
மண்ணில் வாழும் மாந்தனும்
ஒரு துகள் இந்த
பேரியற்கையின்
பெரும் வெளியில்!
ஆனால்
அவனுக்கு மட்டும்
தெரியவில்லை
ஒரு பறவயைப் போலே
மரங்களைப் போலே
புழு பூச்சிகளைப் போலே
இயற்கைகையை ஒன்றும் செய்யாமல்
விட்டு விட!
கவிதைக்குரல்
மருதயாழினி
பேரவை அருவி மலர் கட்டுரை இளவேனில் இதழில்!


புதியதலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்வில் கலந்து கொண்ட போது
-
தமிழ்! எனது உயிர் அணுக்கள் அனைத்தும்…
தமிழ்! எனது உயிர் அணுக்கள் அனைத்தும் இடையறாது சொல்லும் சொல்! தமிழ்! என் இரத்த அணுக்கள் எல்லாம் இடைவிடாது ஏந்திச் செல்லும் மூச்சுக் காற்று! நாவிலே என் தமிழ் மொழி பிறக்கும் வேளை ஓங்கி உயர்ந்த மலை முகடுகளின் வெண்பனிக்கிடையே சிறு செம்மலர் விரியும் வேளை! பொங்கி ஓடும் ஆற்றில் எம்பிக் குதிக்கும் மீன்களாய் உள்ளம் மாறும் வேளை! நீண்ட வேனிலில் வாடிக் கிடக்கும் மேனியைத் தென்றல் தீண்டும் வேளை! இப்படியான ஒப்பில்லா மொழியாளை அன்னைத் தமிழாளை
-
உலகத் தாய்மொழி நாள் நல்வாழ்த்துகள்!
அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் நல்வாழ்த்துகள்! ஒரு மொழி அழிந்தால்! ஒரு இனம் அழியும்! தமிழ் இனத்தைக் காக்கதமிழைக் காப்பாற்றுங்கள்தமிழர்களே! *நாளைய தமிழர்களிடம் தமிழ்* செம்புலப் பெயல் நீராய்கலந்து கிடக்கின்றன எம் மொழியின் சொற்கள்பீடு நடை போட்ட சொற்கள் பலகரைந்து போயுள்ளனகாலத்தால் இன்று! இருக்கும் சொற்களை அள்ளிமுடிந்து கொண்டுதமிழ் அழகியவள் தன்னைஅழகுபடுத்திப் பார்த்துக்கொள்கிறாள் காலவெளிக்கண்ணாடியில்! ஆங்காங்கே துருத்திக் கொண்டிருக்கும்பிற மொழிச் சொற்களைகொய்யச் சொல்லி கொஞ்சும்பார்வை பார்க்கிறாள்! அன்னைத் தமிழ்நாட்டின்அழகில் மயங்கிஅந்நியர் மட்டுமா நம்மைஆண்டார்கள்?அவர்கள்மொழியுமல்லாவா நம்மைஆள்கிறது! மணியும் பவளமுமாய்இரு
-
சிறப்பு விருந்தினர் உரை – பீச்ட்ரீ தமிழ்ப்பள்ளி
ஏப்ரல் 20, 2024 அனைவருக்கும் வணக்கம், ஜார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா பேரூரில் உள்ள பீச்ட்ரீ பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா வரும் ஏப்ரல் 20,2024 ஆம் நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்துள்ள பள்ளி முதல்வர் ருக்மாங்கதன் அவர்களுக்கும் நாள்தோறும் பல்வேறு பணிகளுக்கு இடையே தொய்வின்றி தன்னார்வலர் பணி செய்யும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது பணிவான வணக்கம். “பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை
-
அயலகத் தமிழர் நாள் விழா கவியரங்கம்!
தொன்மை தொடர்ச்சி – சனவரி 11, 2024
-
உலகத்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நிகழும் சனவரி 11, 12- 1-2024 ஆம் நாள்களில், தாய்த் தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை பெரும் பட்டணத்தின் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், சீரும் சிறப்புமாக நிகழ்ந்தேறின தமிழ்நாடு அரசு நிகழ்த்திய அயலகத் தமிழர் நாள் விழாக்கள்! விழாவில், வட அமெரிக்காவில் இருந்து ‘தொன்மை தொடர்ச்சி’ என்கிற தலைப்பில் கவிதை பாட வந்த அழைப்பை ஏற்று தாயகம் சென்று, 22 -1-2024 ஆம் நாள் அட்லாண்டாவிற்குத் திரும்பினேன். மிகவும் குறுகிய காலக் கெடுவில் நான்

